Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

உதவ சென்று உயிர் போன சோகம்… டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 9 ஆம் வகுப்பு மாணவன் பலி…

Gowthami Subramani November 03, 2022 & 13:15 [IST]
உதவ சென்று உயிர் போன சோகம்… டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 9 ஆம் வகுப்பு மாணவன் பலி…Representative Image.

டிராக்டர் ஒன்றில் இருந்து தவறி விழுந்த சிறுவன், டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்க்குடி அருகே கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உதயசூரியன், வனிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் சுவேதா (வயது 14) திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்கியவராக இருந்தார்.

பள்ளி முடிந்த பின், அந்தப் பகுதியின் வயல்வெளியில் உள்ள பாலத்தின் அருகில் நின்று கொண்டிருந்த சுவேதன், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் டிராக்டரில் நெல் ஏற்றிக் கொண்டு காய வைப்பதற்காக அந்தப் பகுதியில் சென்றுள்ளதைப் பார்த்துள்ளான். சுவேதனைக் கடந்து சென்ற சிறிது தூரத்தில், டிராக்டரை அந்தப் பகுதியில் நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றார்.

பாண்டியன் நகர்ந்து சென்ற உடன், திடீரென டிராக்டரும் தானாக நகர்ந்து சென்றுள்ளது. இதனைக் கண்ட சுவேதன், டிராக்டரை நிறுத்துவதற்காக ஏறி டிராக்டர் மீது ஏறி பிரேக்கை அழுத்த முயன்றுள்ளான். எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சுவேதன் கீழே விழுந்ததில், டிராக்டர் நகர்ந்து, அந்த சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்