Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி...இளம் பெண் கைது..!

madhankumar June 23, 2022 & 14:41 [IST]
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி...இளம் பெண் கைது..!Representative Image.

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீவிநாயகா சொல்யூசன் என்ற பெயரில் வேலை வாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை சுபாஷினி மற்றும் அசோக்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில், தஞ்சாவூர் மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன், பாபநாசம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் இருவரும் வேலை தொடர்பாக இவர்களிடம் வந்துள்ளனர். அப்போது, இருவரிடமும் தலா 6 லட்ச ரூபாய் கொடுத்தால் டெல்லியில் வருமான வரித் துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து அவர்களும் ஆன்லைனில் பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு வருமான வரித்துறையின் பணி நியமன ஆணையை அனுப்பியுள்ளனர். அதனை பரிசோதித்து பார்த்த நிலையில் அது போலியானது என்பதை உணர்ந்த அவர்கள் சுபாஷினி மற்றும் அசோக்குமார் ஆகியோரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். 

பணத்தை திரும்பித்தாரா தாமதம் செய்த அவர்கள் வேலை வாய்ப்பு நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த இருவரும் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் விசாரணை நடத்திவந்த போலீசார் இடிகரை பகுதியில் உள்ள வீட்டில் தலைமறைவாகி இருந்த சுபாசினியை நேற்று இரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அசோக்குமாரை போலீசார் தேடிவருகின்றனர் இதே போல் பலரிடம் மோசடி செய்து இருக்கலாம் என்பதால் இது குறித்து பந்தயசாலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்