Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கொடைக்கானலில் தொடரும் விபரீதம்; இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு! 

KANIMOZHI Updated:
கொடைக்கானலில் தொடரும் விபரீதம்; இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு! Representative Image.

கொடைக்கானலில் போதைக்காளான் பயன்படுத்தும் அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இளைஞர்கள் சிலர் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிக்கும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பதிவேற்றப்பட்டு, வைரலாகி வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தளமாகும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகைபுரிகிறார்கள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும் போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள. 

குறிப்பாக கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய போதை காளான் என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் இயற்கையாக வளர்ந்து வருகிறது. பல வகையான காளான்கள் கொடைக்கானலில் இருக்கிறது கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கு மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் போதை காளானும் ஒரு வகையாகும் போதை காளான் மட்டுமல்லாது உணவுக்காக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷ தன்மை உடைய காளான்களும் இதேபோன்று இயற்கையாகவே கிடைக்கிறது.

போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தாலும் காவல்துறையினர் பல வழக்குகள் பதிந்தும் இதுவரை போதைக்காளான் கலாச்சாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. இந்நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில் போதை காளான் பிரபலமடைந்துள்ளது.

 இந்நிலையில்  வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள் பல வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். 
அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். 

மேலும் இதுபோன்ற வீடியோக்கள் பல இளைஞர்களால் கவரப்பட்டு, குறிப்பிட்ட இடத்திற்கு போதை காளான்களை தேடிச் செல்ல சாதகமாக அமைந்து வருகிறது. இதனை சைபர் கிரைம் போலீசார் முழுவதுமாக கண்காணிக்க வேண்டும் போதை காளான் கலாச்சாரத்தை ஒழிப்பதற்காக அரசு முன் வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுத்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்