Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு

Baskarans Updated:
பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு Representative Image.

டில்லி: எதிர்கட்சி பட்டியிலில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று அங்கு சென்றார். அப்போது 5 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னார் போபாலில் பாஜக பூத் உறுப்பினர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டமான பொது சிவில் சட்டத்தை உயர்நீதிமன்றம் ஆதரிக்கிறது. ஆனால் ஒட்டு வங்கி அரசியல் நடத்துபவர்கள் எதிர்கிறார்கள் என்றார்.

மக்களை தவறாக வழிநடத்தவும், இஸ்லாமியர்களை தூண்டி விடவும் பொது சிவில் சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். .தங்களை தூண்டிவிட்டு ஆதாயம் அடையும் அரசியல் கட்சிகளை இந்திய முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.பொது சிவில் சட்டம் அவசியம் என்று தெரிவித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜாபியத் உலமா-இ-ஹிந்த் ஆகிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பியுமான சந்தீப் பதக் கூறுகையில், நாங்கள் ஒரே மாதிரியான சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இருக்கிறோம். 44 வது பிரிவு நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது. ஆனால் இது அனைத்து மதங்களுடனும் தொடர்புடையது என்பதால், இந்த பிரச்சினையில் பெரிய அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அனைத்து மதத்தினரிடம் இருந்தும்,அரசியல் கட்சியினரிடம் இருந்தும் ஆலோசனைகளை பெறவேண்டும். ஒருமித்த கருத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாமல் அதை செயல்படுத்த முடியாது என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்