Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் ஒரு லாக்-அப் மரணம்...என்ன நடக்கிறது தமிழகத்தில்....?

madhankumar June 13, 2022 & 11:36 [IST]
மீண்டும் ஒரு லாக்-அப் மரணம்...என்ன நடக்கிறது தமிழகத்தில்....?Representative Image.

திருவள்ளுர் மாவட்டம் அலமாதி, கேட்டைகாரப்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், இவர் மீது 27 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்கள் இவரை கைது செய்து அப்பகுதியில் உள்ள லாட்ஜில் வைத்து விசாரணை செய்துள்ளனர்.

பின்னர் அவரை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது, உடனே அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது அங்குள்ள மருத்துவர்கள் இவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். அங்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விசாரணைக்கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள நிலையில், சென்னை காவல் துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, காவல் இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ராஜசேகரனிடம் விசாரணை நடத்திய காவலர்கள் யார் யார், எங்கு வைத்து விசாரணை நடத்தினார்கள் என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 இது ஒன்றும் புதிதல்ல இது போன்று பல முறை நடந்துள்ளது, தூத்துக்குடியில் தந்தை மற்றும் மகனை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்றுள்ளனர், அதேபோல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் என்பவர் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார், தற்போது ராஜசேகரன். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்