Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிற்ப கலைக்கூடத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட்டு போலீசார் விசாரணை

selvarani Updated:
சிற்ப கலைக்கூடத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட்டு போலீசார் விசாரணைRepresentative Image.

மேலூர் அருகே சிற்பக் கலைக்கூடம் செயல்படும் கட்டிடத்தில் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான உபகரணங்களை திருடிச்சென்றது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தபுளியம்பட்டியில் செல்வம் என்பவர் தனது மகன் ராம்குமார் உடன் இணைந்து அப்பகுதியில் கடந்த இரண்டு மாதமாக சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல சிற்பக் கலைக்கூடம் செயல்படும் கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குசென்றுள்ளார்.

இன்று கலைக்கூடத்தை திறக்க வரும்போது, கட்டிடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தப்போது, கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சிற்பக் கலைக்கூடம் செய்ய தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கட்டிங் மெஷின் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள், உளி, சுத்தியல் உள்ளிட்ட சாமான்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் செல்வம் உடனடியாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்