Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மயானத்தில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய முடியும்..! - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

selvarani Updated:
மயானத்தில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய முடியும்..! - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்Representative Image.

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும். வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்தாகவும், புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் முகமது சபீக் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய முழுவு அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும்., இந்த விதிகளுக்கு முரணாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து, மயானத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்