Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rain Alert in Tamilnadu: அசானி புயல் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்...!

Nandhinipriya Ganeshan May 09, 2022 & 08:40 [IST]
Rain Alert in Tamilnadu: அசானி புயல் தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்...!Representative Image.

அசானி புயல்:

Rain Alert in Tamilnadu: தமிழகத்தில் கோடை வெயில் நீடித்து வரும் நிலையில் வங்க கடலில் உருவா "அசானி"  புயல் (Cyclone Asani) தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால், தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் கனமழை:

இந்த புயல் வட ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால், இன்று (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை (Rain status today in tamilnadu) பெய்யக்கூடும். மேலும், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் மழை பெயதாலும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை கூண்டு:

வங்கக் கடலில் புயல் இருப்பதையடுத்து சென்னை புதுச்சேரி, எண்ணூர், உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1,2, மற்றும் 3 ஏற்றப்பட்டுள்ளன. இது தவிர, மத்திய வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கி.மீ. முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்திலும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும், ஆழ் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக  கரை திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்