Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சவுதியில் பிச்சை எடுத்த மோடியார்.. என்ன நடந்தது.. இது தான் காரணமா?

Sekar June 28, 2022 & 17:32 [IST]
சவுதியில் பிச்சை எடுத்த மோடியார்.. என்ன நடந்தது.. இது தான் காரணமா?Representative Image.

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சவுதி அரேபியாவின் மதீனாவில் பிச்சை எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷின் மத விவகார அமைச்சகம், ஹஜ்ஜிற்காக சவூதிக்கு பயணத்தை ஏற்பாடு செய்யும் நிறுவனத்திற்கு இது தொடர்பாக ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், முகமது மோடியார் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்ட அந்த நாட்டவர், பிச்சை எடுத்து வங்காளதேசத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளது. 

சவூதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டு முக்கிய மதத் தலங்களில் ஒன்றான மதீனாவில் தனது பை திருடுபோய்விட்டதாகக் கூறி மோடியார் ரஹ்மான் பிச்சை எடுத்துள்ளார்.

மோடியார் ரஹ்மான் மெஹர்பூரின் கங்னி உபாசிலாவைச் சேர்ந்தவர். அவரை சவுதி போலீசார் கைது செய்த நிலையில், பங்களாதேஷ் ஹஜ் மிஷனின் அதிகாரி பின்னர் அவரை பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், ஜூன் 25 அன்று மோடியாரின் பயணத்துக்கு ஏற்பாடு செய்த ஏஜென்சியான தன்ஷிரி ஏர் டிராவல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்குக் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதன் துணைச் செயலாளர் அபுல் காஷேம் முஹம்மது ஷஹீன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் ஹஜ் நிர்வாக முயற்சிகளை சீர்குலைத்தது மற்றும் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை மீறுவதாகும் என வங்கதேச அரசு கண்டித்து, மூன்று நாட்களுக்குள் ஹஜ் மற்றும் உம்ரா மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நிர்வாக நடவடிக்கை ஏன் எடுக்கப்படாது என்பதை விளக்குமாறு ஏஜென்சியிடம் கேட்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்