Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bill Gates Donation: அனைத்து சொத்துக்களும் நன்கொடை – பில்கேட்ஸ்.. ச்ச என்ன மனுஷன்யா.. அந்த மனசு தான் சார் கடவுள்…!!

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 09:15 [IST]
Bill Gates Donation: அனைத்து சொத்துக்களும் நன்கொடை – பில்கேட்ஸ்.. ச்ச என்ன மனுஷன்யா.. அந்த மனசு தான் சார் கடவுள்…!!Representative Image.

Bill Gates Donation: நீ என்ன பில்கேட்ஸ் வீட்டு பையனா? என்று அதிக பணம் செலவிக்கும் போது நம்மை நமது பெற்றோர்கள் கலாய்பதுண்டு. ஏனென்றால், நமக்கு தெரியும் பில்கேட்ஸ் எவ்வளவு பெரிய பணக்காரர் என்று. இவர் தற்போது தன்னுடைய பேருக்கு ஏற்றவாறு ஒரு செயலை செய்திருக்கிறார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தொழில்நுட்ப ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஓனருமான பில்கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். அந்தவகையில், இவர் 2000 ஆம் ஆண்டு Bill & Melinda Gates என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் கல்வி, சுகாதாரம் போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பில்கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்தவகையில், இவர் இம்மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளார். இது குறித்து பேசிய அவர், “எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அத்துனை சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டு உள்ளேன்.  இதை தியாகமாக நினைக்கவில்லை. இவ்வுலகில் பெரிய சவால்களை சமாளிப்பதில் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். மேலும், எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பி தர வேண்டிய கடமை எனக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸின் இந்த பெரிய மனசுக்கும், மனிதாபிமானத்திற்கும் இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Tags:

Bill gates donation | Bill Gates foundation | Bill & Melinda Gates


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்