Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாஜக பெண் ஆதரவாளர் கோவையில் கைது..! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக சைபர் கிரைம் அதிரடி..!!

Saraswathi Updated:
பாஜக பெண் ஆதரவாளர் கோவையில் கைது..! சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக சைபர் கிரைம் அதிரடி..!!Representative Image.

தமிழக முதலமைச்சர் மற்றும் பெரியார் குறித்து சமூக வலைதளத்தில்அவதூறு  பரப்பியதாக பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கி என்பவரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.  

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கி.  இவர், தொடர்ந்து தமது டிவிட்டர் பக்கத்தில் தந்தை பெரியார் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிவந்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக, திமுக தகவல் தொழில்நுட்ப அணியை  (ஐ.டி விங்) சேர்ந்த ஹரீஸ் என்பவர் கோவை மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார். 

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உமா கார்க்சியைப்  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் சிக்கியுள்ள பாஜக பெண் ஆதரவாளர் உமா கார்க்கி,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் சிறப்பு சமூக செயல்பாட்டாளருக்கான விருதை பெற்றவர். 

இதனிடையே, அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த 10 மற்றும் 12ம் வகுப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவர்களுக்கான உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பெரியார், அம்பேத்கரை படிக்க அறிவுறுத்தியதை மேற்கோள் காட்டியும், விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக கருத்துகளை வெளியிட்டதாக உமா கார்க்கி மீது விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்