Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கு - அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Saraswathi Updated:
விழுப்புரம் திரவுபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கு -  அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுRepresentative Image.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட திரவுபதி அம்மன் கோவிலை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், குறிப்பிட்ட பிரிவினரை அனிமதிக்கவில்லை எனக் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கடந்த ஜூன் 7ம் தேதி கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்தும், கோவிலை மீண்டும் திறக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  

அவரது மனுவில், கோவிலில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்படவில்லை எனவும்,  தீண்டாமை பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட பொதுமக்கள் இல்லாமல், கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது கோவிலில் தினசரி பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என்ற ஆகமத்தை மீறும் வகையில்  சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், கோவிலுக்கு சீல் வைப்பதை தவிர்த்து, பொதுமக்களை அனுமதிக்காமல் பூஜைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி இருக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, கோவிலுக்கு சீல் வைக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை கோவிலுக்கு தக்காரை நியமித்தபோதும், அவரால் பொறுப்பேற்க முடியவில்லை என்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார். இதையடுத்து, பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்து வருவதால், கோவில் விவகாரத்தில் அறநிலையத் துறைதான்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் இது தொடர்பாக, அறநிலையத் துறையை அணுகும்படி அறிவுறுத்தியதோடு, மனுதாரரின் விண்ணப்பத்தை சட்டப்படி  பரிசீலிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு  வழக்கை முடித்து வைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்