Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதலில் மனித நேயம்.. மத்ததெல்லாம் அப்புறம் தான்.. நெகிழ வைத்த பிஎஸ்எஃப்

Sekar July 02, 2022 & 18:57 [IST]
முதலில் மனித நேயம்.. மத்ததெல்லாம் அப்புறம் தான்.. நெகிழ வைத்த பிஎஸ்எஃப்Representative Image.

சர்வதேச எல்லையை தாண்டி கவனக்குறைவாக இந்திய பகுதிக்குள் நுழைந்த மூன்று வயது பாகிஸ்தானிய குழந்தையை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மீட்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்த செயல் நெகிழ வைத்துள்ளது.

நேற்று இரவு 7:15 மணியளவில், 182 பட்டாலியனைச் சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள், ஃபெரோஸ்பூர் செக்டாரில் காவலில் இருந்தபோது, எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த சுமார் 3 வயதுடைய பாகிஸ்தான் குழந்தையை மீட்டது.

ஆனால் அந்த குழந்தையால் எப்படி வந்தோம், என்ன நடந்தது என்பது குறித்து விவரிக்க முடியவில்லை. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படை குழந்தையை தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு தகவல் கொடுத்தது.

இதையடுத்து இரவு 9:45 மணியளவில், பாகிஸ்தானிய குழந்தை ஒரு நல்லெண்ண சைகையாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கவனக்குறைவாக எல்லையைக் கடப்பவர்களைக் கையாளும் போது எல்லை பாதுகாப்புப் படை எப்போதும் மனிதாபிமான அணுகுமுறையை மேற்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்