Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamilnadu News Live : காவல்ர்கள் மீது வழக்கு..? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி..!

Muthu Kumar May 23, 2022 & 18:15 [IST]
Tamilnadu News Live : காவல்ர்கள் மீது வழக்கு..? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய விதி..!Representative Image.

Tamilnadu News Live : சென்னையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கட்டாயம் என புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் தலைக்கவசம் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

புதிய போக்குவரத்து விதி

இதனையடுத்து, சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

வழக்குப்பதிவு 

இந்நிலையில், சென்னையில் இன்று தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  2,200 வழக்குகளும், இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் சென்றதில் 1,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவலர் மீது வழக்கு 

இந்நிலையில், காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அதுவும் குற்றம் என தெரிவித்துள்ளனர். மேலுக்ம் தலைக்கவசம் அணியாத காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் எச்சரித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்