Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜில் ஜில், கூல் கூல்.. கனமழைக்கு ரெஸ்ட்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
ஜில் ஜில், கூல் கூல்.. கனமழைக்கு ரெஸ்ட்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..Representative Image.

வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (24.11.2022) வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.11.2022 முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறுமா என்பது அடுத்த ஓரிரு நாட்களில் தெரியவரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்