Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகீர்.. சிறுமியை சீரழித்த கயவர்கள்.. கூடிய பஞ்சாயத்து.. வழக்கை மூடி மறைக்க ஒரு லட்சம் பேரம்!!

Sekar July 12, 2022 & 15:10 [IST]
பகீர்.. சிறுமியை சீரழித்த கயவர்கள்.. கூடிய பஞ்சாயத்து.. வழக்கை மூடி மறைக்க ஒரு லட்சம் பேரம்!!Representative Image.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு மைனர் பெண்ணை நான்கு பேர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அங்கு உள்ளூர் பஞ்சாயத்து குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு வழக்கை மூடி மறைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தின் கன்சாபெல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 9) இந்த சம்பவம் நடந்துள்ளது.

16 வயது சிறுமி ஒருவர் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பியபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த சிறுமியை வழிமறித்து அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது 

இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கிராம மக்கள் அடுத்த நாள் கிராம பஞ்சாயத்தை கூட்டி பிரச்னையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஞ்சாயத்து முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக ரூ. 10,000 கொடுத்தனர் மற்றும் மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக உறுதியளித்தனர்.

இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தையின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து பேசிய ஜாஷ்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரதிபா பாண்டே, விசாரணையைத் தொடர்ந்து இந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்