Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோயில்? - அமைச்சர் சேகர்பாபு பரபரப்புப் பேட்டி

Saraswathi Updated:
அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோயில்? - அமைச்சர் சேகர்பாபு பரபரப்புப் பேட்டி Representative Image.

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இதனால், அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் இந்தக் கோயிலும், தீட்சிதர்களும் சிக்கிவருகின்றனர். அண்மையில், கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை தீட்சிதர்கள் பொருட்படுத்தாமல், பல நேரங்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்குவதில்லை எனப் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, வரும் 29ம் தேதி வரை பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் வைத்ததால் மீண்டும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து, கோயிலுக்கு வந்த இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் சரண்யா, அந்த அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றார்.

அப்போது, தீட்சிதர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மிரட்டும் பாணியில் நடந்துகொண்டதாக காவல்துறையிடம் இந்துசமய அறநிலையத்துறை செயலாளர் சரண்யா புகார் அளித்தார். இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஒரு அதிகார மையத்தை உருவாக்கி செயல்பட்டுவருவதாகக் கூறினார்.

மேலும்நடராஜர் கோயிலை தங்களின் சொந்த நிறுவனத்தைப்போல் நினைத்து தீட்சிதர்கள் நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணங்களைத் திரட்டி, நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்