Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணன் தம்பின்னு நான் நினைப்பாங்க.. முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு!!

Sekar August 21, 2022 & 15:04 [IST]
அண்ணன் தம்பின்னு நான் நினைப்பாங்க.. முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு!!Representative Image.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தானும் தனது மகன் உதயநிதியும் ஒன்றாக சென்றால், தங்கள் இருவரையும் அண்ணன் தம்பி என்றே நினைப்பார்கள் என கலகலப்பாக கூறியுள்ளது வைரலாகி வருகிறது.

சென்னை அண்ணா நகரில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்று கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு நடைபெற்று வருகிறது. 

ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியின் மூலம், இந்த சாலைகளில் 3 மணி நேரத்திற்கு முழுவதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச சைக்கிள் பயணம், ஸ்கேட்டிங், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  

இதில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கூடைப்பந்து, பேட்மிட்டன்,டேபிள் டென்னிஸ், ஆகிய விளையாட்டுகளை விளையாடி உற்சாகமூட்டினார். மேலும் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நடந்து சென்ற முதலமைச்சருடன் பொதுமக்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாலையில் ஜிம்மில் உடற்பயிற்சி, காலையில் யோகா மற்றும் ஐந்து கிலோமீட்டர் வாக்கிங் செல்கிறேன். எனக்கு வயது 69. 70 வயதை நெருங்குகிறேன்.  மகிழ்ச்சியான தெரு என்ற தலைப்பில் மூன்று மாதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் முன்பே வருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் கொரோனா தொற்றால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

கொரோனா தொற்றிலிருந்து இருந்து இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டதற்கு காரணம் எனது உடற்பயிற்சி தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது வயதை வெளியில் சொன்னால் யாரும் அதை நம்ப மாட்டார்கள். நானும் எனது மகனும் ஒன்றாக சென்றால் அண்ணன் தம்பி என்று தான் கூறுவார்கள். 

நான் உடலை பாதுகாக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அக்கறை எடுத்துக் கொள்வேன். எப்போதும் வயிறு முட்ட உணவு உட்கொள்ளக் கூடாது. எவ்வளவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி தவறாமல் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொண்டால் எந்த டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். சென்னையில் இருந்தாலும் வெளி மாவட்டங்களுக்கு சென்றாலும் வெளிநாடுகளுக்கு சென்றாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்