Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்..!

Muthu Kumar August 19, 2022 & 13:20 [IST]
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம்..!Representative Image.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட் 23-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார். இதனையடுத்து, கோவையில் 24-ம் தேதி காலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதனையடுத்து, அன்று மாலை பொள்ளாச்சியில் பிறகட்சியினர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகயில் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும்,  திருப்பூரில் 25-ம் தேதி சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

மேலும், 26-ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் மாலையில் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்