Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியா எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை வரும் சீன கப்பல்..!

madhankumar August 11, 2022 & 19:46 [IST]
இந்தியா எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை வரும் சீன கப்பல்..!Representative Image.

சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி யுவான் வாங்-5 என்ற உளவுக் கப்பல் இலங்கை நோக்கி புறப்பட்டது. தைவானை கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கப்பல், ஆகஸ்ட் 11 ஆம் தேதி இலங்கையின் அம்மாந்தோட்டை துறைமுகத்தை அடையும் எனவும், ஒரு வாரத்திற்கு அங்கு கப்பல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் எனவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

இதற்கு முன்னர் இந்த கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து இந்தியா இலங்கையிடம் தங்களது கவலையை தெரிவித்திருந்தது, ஆனால் அப்போது அதை திட்டவட்டமாக மறுத்த இலங்கை அரசு, தற்போது சீன உளவுக்கப்பலின் வருகையை உறுதி செய்திருக்கிறது.

யுவான் வாங் 5 கப்பலை ஹம்பாந்தோட்டைக்கு வந்தடையும் தேதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது என ஒரு கடிதத்தையும் இலங்கை அனுப்பியது. இது குறித்து பேசிய இலங்கை அதிபரான ரணில் விக்கிரமசிங்கவும், இந்த சர்ச்சைக்குரிய பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்று உறுதியளித்திருந்தார். சீனக்கப்பலை அனுமதிக்ககூடாது என இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்த நிலையிலும், சீனாவின் கப்பல் வந்துகொண்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை நிலைமையின்படி வேகத்தை அதிகரித்த யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிக்கல்மைல் தூரத்தை அடைந்தது. பின்னர் புதன்கிழமைவாக்கில் வேகத்தை குறைத்த அந்தக்கப்பல் அந்தமான் தீவை நோக்கி பயணத்தை திருப்பியதாக கூறப்பட்டது. திசை மாறியதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அந்தக்கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்