Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் ஒரு ஓட்டுகூட கிடைக்காது: மத்திய அமைச்சர் சாடல்

Baskarans Updated:
முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிமாநிலத்தில் ஒரு ஓட்டுகூட கிடைக்காது: மத்திய அமைச்சர் சாடல் Representative Image.

டெல்லி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வெளிமாநிலங்களில் ஒரு ஓட்டு கூட கிடைக்காது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, ராஜஸ்தான் மாநிலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் வளரவில்லை. அம்மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. மாநிலத்தில் பெண்களுக்கும்,சிறுமிகளுக்கும் பாதுகாப்பில்லை. இதனால் இந்த முறை மாநில அரசை மாற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அவர்களது மாநிலத்தை தவிர வெளிமாநிலங்களில் ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது. இந்த ஒன்றிணைந்த எதிர்கட்சி ஊழல்வாதிகளின் கூட்டணி என்றார்.

மேலும் பொதுசிவில் சட்டம் குறித்து அவர் கூறுகையில், நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க சட்டம் இயற்றுவது காலத்தின் தேவை. சிறுபான்மையினர்களுக்காக பிரதமர் மோடி செய்த வளர்ச்சிப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில் மறந்து விட்டார் என நினைக்கிறேன். ராஜ்சபாவில் எங்களுக்கு முழு பெரும்பான்மை உள்ளது. நாடு ஒன்றுபட வேண்டும். ஒரே மாதிரியான குடியுரிமை சட்டத்தால், பல கட்சிகளை பாஜகவை ஆதரிக்கும் என நினைக்கிறேன் என்றார்.

இதை தொடர்ந்து தக்காளி விலை உயர்வு குறித்து பேசுகையில், தக்காளியின் விலை ஒருவார காலமாக உயர்ந்துள்ளது. பருவமழையால் தான் இந்த விலையுர்வுக்கு காரணம். ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்தால் விலை குறையும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்