Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாகர்கோவில் அருகே காபி ஷாப் சூரையாடல்: வாலிபருக்கு வலைவீச்சு

Baskarans Updated:
நாகர்கோவில் அருகே காபி ஷாப் சூரையாடல்: வாலிபருக்கு வலைவீச்சு Representative Image.

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே காபி ஷாப்பை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம் பகுதியை சேர்ந்த சதீஷ்பிரபு அந்த பகுதியில் கம்பியூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சுங்கான்கடை பகுதியில் ஆன்றனி ஜெரிஸ் என்பவர் நடத்தி வரும் காபி ஷாப்பிற்கு சென்று காபி, டீ மற்றும் சிகரெட் வாங்கி விட்டு காசு கொடுக்காமல் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி மதியம் நண்பர்களுடன் காபி ஷாப்பிற்கு சென்ற சதீஷ்பிரபு சிகரெட் வாங்கியுள்ளார். அவரிடம் ஆன்றனி ஜெரிஸ் காசு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் பிரபு அன்றிரவு போதையில் கையில் கம்புடன் வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காபி ஷாப்பை அடித்து நொறுக்கியுள்ளார்.

இதுகுறித்து ஆன்றனி ஜெரின் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், இரணியல் போலீசார் சதீஷ் பிரபுவை விசாரணைக்கு அழைக்க ஆன்றணி ஜெரிஸின் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர்.

முதலில் ஆன்றணி ஜெரிஸ் பேசிய நிலையில், வந்தால் கொன்று விடுவேன் இதை ரெக்காடு பண்ணி போலீசில் கொடு என்று மிரட்டிய நிலையில், போலீசார் அந்த போனை வாங்கி பேசிய நிலையிலும் போலீசாரிடமும் கொலை மிரட்டல் விடுத்தப்படியே பேசியுள்ளார்.

இதனையடுத்து இரணியல் போலீசார் சதீஷ் பிரபு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சதிஷ்பிரபு காபி ஷாப்பை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்