Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ரூ.1000 வாடகை; சின்னமலை ரெட் லைட் பேனரால் பரபரப்பு!

KANIMOZHI Updated:
பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ரூ.1000 வாடகை; சின்னமலை ரெட் லைட் பேனரால் பரபரப்பு!Representative Image.

சென்னையில் பாலியலுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் தனியார் தங்கும் விடுதியால் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் LED பலகை மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சின்னமலை பகுதியில் தனியார் தங்கும் விடுதிகள் பல செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்னமலை என்.ஜி.ஆர் காலனியில் உள்ள சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே Hotel Non Veg என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் தங்கும் விடுதியின் முகப்புப் பகுதியில் 1000 ரூபாய்க்கு அறை வாடகைக்கு விடப்படும் எனவும், எந்த பெண்ணை வேண்டுமானாலும் அழைத்து வந்து உல்லாசமாக இருக்கலாம் என்ற சர்ச்சைக்குரிய வாசகத்துடன் LED பலகை மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் அந்த LED விளம்பர பலகை மூலம் செய்யப்பட்ட விளம்பரத்தை வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, சென்னை காவல்துறை, தமிழக முதலமைச்சர் ஆகியோரை குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சென்னையில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பொதுமக்களில் ஒருவர் பதிவிட்ட இந்த பதிவு ட்விட்டரில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பதிவின் கீழ் பலர் கருத்து பதிவிட்டும், அந்த பதிவை பகிர்ந்தும் வருகின்றனர்.

தனியார் தங்கும் விடுதியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பாக காவல் துறையினரிடம் கேட்டபோது சம்மந்தப்பட்ட விடுதிக்கு சென்று விடுதியின் மேனேஜர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஊழியர்கள் யாரோ திட்டமிட்டு பழிவாங்குவதற்காக LED பலகையில் எழுதி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இச்சம்பவம்  விசாரணை நடத்தப்படும் எனவும் சம்மந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியிடம் விளக்கம் கேட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

This video and photo was shot at Little Mount just few minutes back. @chennaipolice_ @tnpoliceoffl please look into this ASAP and take action.
How can this happen in Chennai? @aidwatn@CMOTamilnadu @ThamizhachiTh pic.twitter.com/paTukOrfbu

— Kavitha Gajendran (@kavithazahir) December 24, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்