Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வர் அலுவலகத்திலேயே ஊழல்.. ஆளுநர் அதிரடி நடவடிக்கை!!

Sekar June 23, 2022 & 12:16 [IST]
முதல்வர் அலுவலகத்திலேயே ஊழல்.. ஆளுநர் அதிரடி நடவடிக்கை!!Representative Image.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் பணியாற்றும் துனைச் செயலர் மட்டத்திலான ஒரு அதிகாரியை ஊழல் குற்றச்சாட்டுக்காக லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா சஸ்பெண்ட் செய்துள்ளார். 

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரி பிரகாஷ் சந்திர தாக்கூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தவிர, துணை நிலை ஆளுநர் ஹர்ஷித் ஜெயின் (வசந்த் விஹார்) மற்றும் தேவேந்திர ஷர்மா (விவேக் விஹார்) ஆகிய இரண்டு துணை-பிரிவு கலெக்டர்களையும் (எஸ்டிஎம்) இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை முன்னதாக, கல்காஜி விரிவாக்கத்தில் இடபிள்யுஎஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் குளறுபடிகளுக்கு காரணமான டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் (DDA) இரண்டு உதவிப் பொறியாளர்களை சக்சேனா இடைநீக்கம் செய்தார்.

இதற்கிடையில், டெல்லி அரசாங்கத்தில் கீழ் அதிகாரத்துவத்தில் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டெல்லி அரசாங்கத்தின் கீழ்நிலை அதிகாரத்துவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (சுமார் 8,000 பணியாளர்கள்) வேறு பணியிடங்களுக்கு ட்ரான்ஸ்பெர் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், தலைமைச் செயலர் நரேஷ்குமார், பல ஆண்டுகளாக அந்தந்தப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களை இடமாற்றம் செய்யுமாறு துறைத் தலைவர்களுக்கு உத்தரவிட்டார். ஜூலை முதல் வாரத்தில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்