Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை முழுவதும் 15டன் மாம்பழங்கள் அழிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

Baskarans Updated:
சென்னை முழுவதும் 15டன் மாம்பழங்கள் அழிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை Representative Image.

சென்னை முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மாம்பழம் சீசன் தொடங்கி அதிக அளவில் மாம்பழங்கள் வரத் தொடங்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் புதிதாக முளைத்துள்ள மாம்பழக் கடைகள். தனிப்பட்ட லாபத்திற்காக ஒரு சில வியாபாரிகள் மாம்பழத்தை விஷமாக மாற்றி வருகின்றனர்.

இயற்கையாகவே பழுக்கும் வரை காத்திருக்காமல் ஒரு சிலர் தோப்புகளில் மாங்காய் முற்றும் வரை காத்திடாமல் முன்பே பறித்து கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கின்றனர். இவ்வாறு பழுக்க வைக்க கூடிய பழங்கள் மனம் சுவை அனைத்தையும் இழந்து பார்ப்பதற்கு பல பல என தோற்றமளிக்கிறது.

கார்பைடு கற்களில் உள்ள வேதிப்பொருள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவர்களை ஏற்படுத்துவதோடு உடலை நலிவடையச் செய்யும். உடலில் திசுக்களுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜன் தடைபடுவதோடு, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. நாளடைவில் புற்றுநோயை உண்டாக்கும் மட்டுமின்றி உயிர்போகும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

எப்படி நல்ல பழங்களை தேர்வு செய்வது என்றால் கார்பைடு கற்களை கொண்டு பழுக்க வைத்த பழங்கள் முழுவதுமாக பெரும்பாலும் பல பலப்பான தோற்றத்தில் இருக்கும் உள்ளே பார்க்கும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இயற்கையாக பழுத்த பழங்களில் புள்ளி போன்ற அமைப்புகள் இருக்கும். காம்புகளில் பச்சை நிறம் இருக்கும் பழத்தினை அறுத்து பார்க்கும் பொழுது தோல் பகுதியில் இருந்து கொட்டை வரை ஒரே வண்ணத்தில் இருந்தால் அது நல்ல பழம் வாழைப் பழம் முழுவதுமாக பழுத்து இருந்தால், அது ரசாயனம் தெளிக்கப்பட்ட பழம் தவிர்த்து காம்புகள் கருப்பு நிறத்தில் இருந்தால், அது இயற்கையாக பழுத்த பழம் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்

எத்திலின் கேசை பயன்படுத்தி பழங்களை பறிக்க வைக்கலாம் என்று உணவுத்துறை அறிகுறித்து வரும் நிலையில் அதற்கு எடுக்கக் கூடிய நேரம் 48 மணி நேரம் ஆகும் அதற்கு கூட பொறுமை இல்லாமல் சுயலாபத்திற்காக ரசாயனங்களை கொண்டு பழுக்க வைத்து மக்களுக்கு எமனாக பழங்களை மாற்றுகின்றனர் ஒரு சில வியாபாரிகள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்