Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஈத் பெருநாளில் பசுக்களை கொள்ளாதீர்கள்.. அட.. இதைச் சொன்னது இவரா?

Sekar July 05, 2022 & 11:52 [IST]
ஈத் பெருநாளில் பசுக்களை கொள்ளாதீர்கள்.. அட.. இதைச் சொன்னது இவரா?Representative Image.

இந்துக்கள் பசுக்களை புனிதமாக கருதுவதால் அஸ்ஸாமில் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் வரும் ஜூலை 10ம் தேதி ஈத் பண்டிகையின் போது பசுக்களுக்கு குர்பானி கொடுக்க வேண்டாம் என்று அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AIUDF) தலைவர் பதுருதீன் அஜ்மல் வலியுறுத்தியுள்ளார்.

"பல்வேறு சமூகங்கள், இனக்குழுக்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த தனிநபர்களின் தாயகமாக இந்தியா உள்ளது. பசுவை புனித சின்னமாக வணங்கும் சனாதன நம்பிக்கை, பெரும்பான்மையான இந்தியர்களால் பின்பற்றப்படுகிறது. இந்துக்கள் பசுவை தாயாக நம்புகிறார்கள்." என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமலமடைந்தவர் தான் இந்த பதுருதீன் அஜ்மல். ஆனால் அவர் தற்போது தடாலடியாக இந்துக்கள் புனிதமாக கருதும் பசுக்களை ஈத் பெருநாளில் குர்பானி கொடுக்க வேண்டாம் எனக் கூறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பதுருதீன் அஜ்மல் மேலும் கூறுகையில், ஈத் காலத்தில் பசுக்களை கொல்ல வேண்டாம் என்று கூறியதோடு, இஸ்லாம் எந்த மிருகத்தையும் கொல்லக் கோரவில்லை என்று முஸ்லீம்களை வலியுறுத்தினார்.

தாருல் உலூம் தியோபந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈத் அன்று பசுக்களை பலியிடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அஜ்மல் கூறினார். அஸ்ஸாமில் உள்ள ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பும் ஈத் அன்று பசுக்களை அறுக்க வேண்டாம் என்று முஸ்லீம்களை கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், பதுருதீன் அஜ்மலின் அறிக்கைக்கு பதிலளித்த விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) தலைவர் வினோத் பன்சால் இதை வரவேற்றுள்ளார். அதே சமயம் முஸ்லீம் தலைவர்கள் தங்கள் சமூகத்திடம் மாடுகளை அறுப்பதை நிரந்தரமாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

பதுருதீன் அஜ்மல் போன்ற தலைவர்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் தீவிரவாதிகளிடையேயும் நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும் என்றும் பன்சால் மேலும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டில், ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசாங்கம் அஸ்ஸாம் கால்நடை பாதுகாப்பு மசோதா, 2021 ஐ நிறைவேற்றியது, இது தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மாட்டிறைச்சி விற்பனை மற்றும் வாங்குவதை தடை செய்கிறது.

ஒரு குறிப்பிட்ட பகுதியின் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவ அதிகாரியால் வழங்கப்பட்ட தேவையான சான்றிதழைப் பெறாதவரை, ஒரு நபர் கால்நடைகளை வெட்டுவதை இந்த சட்டம் தடைசெய்வது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்