Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குடிபோதையில் தகராறு; நள்ளிரவில் நண்பன் கத்தியால் குத்திக் கொலை!

kanimozhi Updated:
குடிபோதையில் தகராறு; நள்ளிரவில் நண்பன் கத்தியால் குத்திக் கொலை! Representative Image.

குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் கௌதம பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரது மகன் முகேஷ்வரன், இவருக்கு திருமணம் ஆகி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது‌. 

அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் விஜய் பிரசாந்த்,  முகேஷ்வரனுக்கு குழந்தை பிறந்ததற்காக நண்பர்களுக்கு பார்ட்டி வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

எனவே நேற்று இரவு முகேஷ்வரன் விஜய் பிரசாந்த் அவரது நண்பர் அஜய் பாலா மூவரும் கௌதம் பேட்டை பகுதியில் உள்ள பூங்காவில் நள்ளிரவு 1மணி அளவில் மது அருந்தி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவர் நடந்து சென்றுள்ளார் இதைப் பார்த்த விஜய் பிரசாந்த்  மனோஜிடம் வம்பிழுக்கும் விதமாக ஏதோ பேசியுள்ளார். இது வாக்குவாதமாக மாறியுள்ளது.  இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சாரா மாறியாக தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதில் விஜய் பிரசாந்த் தாக்கியதில் முகேஷ்வரனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆத்திரமடைந்த முகேஷ் தான் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு வந்து விஜய் பிரசாந்தின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த விஜய் பிரசாந்தை அக்கம் பக்கத்தினர் வீட்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த, திருப்பத்தூர் டவுன் போலீசார், குடிபோதையுடன் பதுக்கியிருந்த முகேஸ்வரனை கைது செய்தனர். 

குடிபோதையில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் நண்பனே நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்