Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல சின்னத்திரை நடிகை கொலை.. பேட்டால் அடித்துக் கொன்ற சச்சின்.. மும்பையில் பரபரப்பு!!

Sekar Updated:
பிரபல சின்னத்திரை நடிகை கொலை.. பேட்டால் அடித்துக் கொன்ற சச்சின்.. மும்பையில் பரபரப்பு!!Representative Image.

பழம்பெரும் தொலைக்காட்சி நடிகையான வீணா கபூர் சொத்து தகராறில் அவரது சொந்த மகன் சச்சின் கபூரால் கொலை செய்யப்பட்டார். மும்பையில் உள்ள விலே பார்லே பகுதியில் இந்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சச்சின் முதலில் தனது தாயின் தலையில் பேஸ்பால் பேட்டால் அடித்துள்ளார். பின்னர் அவரது உடலை ஆற்றில் வீசியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சச்சின் கபூர் மற்றும் வேலைக்காரன் சோட்டு என்ற லாலுகுமார் மண்டல் ஆகியோரை ஜூஹூ போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த செவ்வாய் இரவு, 74 வயதான வீணா கபூர் காணாமல் போனதாக கல்பதரு சொசைட்டியின் பாதுகாப்பு மேற்பார்வையாளர் புகார் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து ஜூஹூ காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அடுத்த நாள் வீணாவின் மகனையும் அவனது வேலைக்காரனையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, கடுமையாக விசாரித்ததில், இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட சச்சின் கபூர் தனது தாயை பேஸ்பால் மட்டையால் தலையில் பலமுறை தாக்கிய பின்னர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களுக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாகவே குற்றத்தைச் செய்து அவரது உடலை ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வீசியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வீணாவின் மூத்த மகன் அமெரிக்காவில் வசிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302,201 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

வீணா கபூர் ‘மிட்டர் பியாரே நு ஹால் முரீடன் டா கெஹ்னா’, ‘டல்: தி கேங்’ மற்றும் ‘பந்தன் பெரோன் கே’ ஆகியவற்றில் நடித்ததற்காக பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்