Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Crime : சென்னையில் கெத்து காட்டும் ரூட்டு தல..? சாட்டையை சுழற்றிய காவலர்கள்..!

Muthu Kumar May 18, 2022 & 10:40 [IST]
Crime : சென்னையில் கெத்து காட்டும் ரூட்டு தல..? சாட்டையை சுழற்றிய காவலர்கள்..!Representative Image.

Crime : சென்னையில் கெத்து காட்டும் ரூட்டு தல உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரூட்டு தல

சென்னை பேருந்து மற்றும் ரயில்களில் ரூட்டு தல எனக் கூறிக்கொண்டு தகராறில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை போலீசார் கண்காணித்து அவ்வப்போது அறிவுரைகள் வழங்கி வருகின்றர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தகராறில் ஈடுபட்ட 2 ரூட்டு தல, உட்பட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கைது

இதில், பூந்தமல்லி ரூட்டு தல பிரேம்குமார், திருத்தணி ரயில் ரூட் தல கிஷோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பல்லவன் சாலையில் பேருந்து நடத்துநரை தாக்கிய நியூ காலேஜ் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அப்துல் முத்தலிப், லோகேஷ் உட்பட மூன்று கல்லூரி மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்து கொள்வது குறித்த பிரச்சனையில் மோதிக்கொண்ட 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னையில் கல்லூரி மாணவர்களின் இருசக்கர வாகனத்தில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார், அப்போது,  ''பேருந்து மற்றும் ரயிலில் ரூட்டு தல என்ற பெயரில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் இதற்கடுத்து கைது போன்ற நடவடிக்கைகள்தான் இருக்கும். ஏற்கனவே கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து மாணவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் இனி அடுத்த கட்ட நடவடிக்கையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்யப்படுவர்'' என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்