Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு...மாணவனுக்கு கத்திக்குத்து...!

madhankumar May 17, 2022 & 15:11 [IST]
மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு...மாணவனுக்கு கத்திக்குத்து...!Representative Image.

காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸார் கைது செய்துள்ளார். கத்திக்குத்து வாங்கிய மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 13ஆம் தேதி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு நடைபெற்றது, அன்று பள்ளிக்கு வந்திருந்த மாணவர்களில் இருவருக்கு மாம்பழம் சாப்பிடுவதில் பிரச்னை நடந்துள்ளது. 

இதனையடுத்து அதே போல் நேற்றைய முன்தினம் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது, அதற்கு ஒரு மாணவன் வராமல் இருந்துள்ளார். பள்ளிக்கு வராத மாணவனை வாட்ஸப்பில் பள்ளிக்கு வருமாறு மற்றொரு மாணவன் மிரட்டியுள்ளார்.  இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த அந்த மாணவனிடம் சக மாணவர்கள் தகராறில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் அவரின் முதுகில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பள்ளியின் சிஇஓ கூறும்போது 10ஆம் வகுப்பு மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அவர்களிடம் ஒழுக்கம் குறைந்து காணப்படுகிறது என வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் முரளி கூறும் போது, கத்தியால் குத்திய மாணவர் மீது, கொலை முயற்சி, மிரட்டல் விடுத்தது, ஒழுங்கீனமாக நடந்தது ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். மாணவர் மீது என்ன நடவடிக்கை என்பது பின்னர் தெரியவரும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்