ஆந்திர மாநிலம் குண்டூரில் வசித்து வரும் சிவசங்கர் பாபு என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் திருமணம் தகவல் மையங்களில் தான் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்துள்ளார். மேலும், விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசி சில பெண்களை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இந்நிலையில்,சிவசங்கர் பாபுவிடம் காதல் வசபட்ட பெண்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து, சிவசங்கர் பாபுவால் பாதிகப்பட்ட சில பெண்கள் கர்ப்பமாகியுள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் மீது சுமார் 8 பெண்கள் ஆந்திர காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…