Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து; இடிபாடுகளில் சிக்கி கணவன், மனைவி உயிரிழப்பு! 

KANIMOZHI Updated:
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து; இடிபாடுகளில் சிக்கி கணவன், மனைவி உயிரிழப்பு! Representative Image.

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கி 2 பேர் உயிரிழப்பு. 6 மணி நேர போராட்டத்துக்கு பின் இருவரும் பிணமாக மீட்கப்பட்ட நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

 

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய் என்ற  இடத்தின் அருகே பட்டிவீரன்பட்டியை பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பில்டிங்கில் இந்து முன்னனி கட்சியைச் சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்பவர் கடந்த 10 வருடங்களாக ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் என்ற பெயரில் பட்டாசு கடையை நடத்தி வருகிறார்.  இந்த பட்டாசு கடையின் மேல் மாடியில்  40 வயதான ஜெயராம், 35 வயதான அவரது மனைவி நாகராணி, 7 வயது மகள் தீபிகா, 5 வயதான இளையமகள் கனிஷ்கா மற்றும் 4 வயதான மோகன் என்ற மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். 

 

இந்நிலையில் இந்த கடையில் நேற்று மாலை மணி அளவில் ஜெயராமன் இவரது மனைவி நாகராணி ஆகிய இருவரும் மாடி வீட்டில்தான் இருந்துள்ளனர். இவரது குழந்தைகள் மாடிக்கு கீழே சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்தது.திடீரென டமால் டமால் என இரண்டு முறை சத்தம் கேட்டுள்ளது. பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு கடையை ஒட்டி இருந்த வணிக வளாகம் மற்றும் கடையின் மேல் மாடியில் இருந்த வீடு இடிந்து முற்றிலும் சேதமானது. 

 

மேலும் இந்த விபத்தில்  சேதமான கட்டடத்தின் ஈடுபாடுகளுக்கிடையே  கடையின் உரிமையாளர்  ஜெயராமன் அவரின் மனைவி நாகராணி இருவரும் ஈடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர். மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மீட்பு பணியில் நான்கு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ஆத்தூர் தீயணைப்புத் துறையினர், திண்டுக்கல்  தீயணைப்புத் துறையினர் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டனர். மாலை 5:30 மணிக்கு ஏற்பட்ட இந்த வெடி விபத்து சம்பவத்தில் 6-மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றது. 

 

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டார். மேலும், ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி சம்பவ இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்