Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மறைமலைநகர் அருகே ரூ.2கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு: போலீசார் நடவடிக்கை..!

Baskarans Updated:
மறைமலைநகர் அருகே ரூ.2கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு: போலீசார் நடவடிக்கை..!Representative Image.

செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட ரூ.2கோடி மதிப்பிலான1.3 டன் கஞ்சாவை நீதிமன்ற அனுமதியுடன் அழித்தனர்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை தடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில், காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து கஞ்சாவை கைப்பற்றி அவற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் எதிரொலியாக சென்னை பெருநகர போலீசார் தொடர்ந்து கஞ்சாக்களை பிடித்து அவற்றை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு கைப்பற்றப்படும் கஞ்சாகளை ஆதாரமாக காவல்துறையினர் வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் நீதிமன்ற அனுமதி உடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று சென்னை மாநகர போலீசார் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை அழிப்பதற்காக வடக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.வி. ரம்யா பாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது அந்த குழுவினர் 68 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1300 கிலோ கஞ்சா 30 கிராம் ஹெராயன் மற்றும் பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்களை அளிக்க நீதிமன்ற மூலம் உத்தரவு பெற்றனர்.

இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின்படி போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தென்மேல்பாக்கம், கிராமத்தில் போதை பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை வெளியீட்டும் நிலையத்தில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் முன்னிலையில் அழிக்கப்பட்டன. அழிக்கப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமலைநகர் அருகே ரூ.2கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு: போலீசார் நடவடிக்கை..!Representative Image

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட 404 வழக்குகள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்திய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

கடந்த 5 மாதங்களில் 400 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், 700-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இன்னும் 2,000 கிலோ போதைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய பிறகு, அவை அழிக்கப்படும். தமிழகத்தில் போதைப் பொருட்களை எந்த வயதினர் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எந்த வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். சென்னையில் போதைப் பொருட்களை விற்ற100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்