Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

புத்தாண்டு முதல் நாளே உயர்ந்த சிலிண்டர் விலை...! | Gas cylinder rate increase

Manoj Krishnamoorthi Updated:
புத்தாண்டு முதல் நாளே உயர்ந்த சிலிண்டர் விலை...! | Gas cylinder rate increaseRepresentative Image.

உணவின்றி அமையாது உலகு என்பது பழமொழி. தற்போதைய கூற்றின் படி பார்த்தால் கேஸ் இல்லாமல் போனால் தான் உணவில்லை என்பது தான் சரி. இன்று வீடு முதல் வணிக பயன்பாடு வரை கேஸ் சிலிண்டர் மூலம் தான் சமையல் செய்கிறோம். அதிகரிக்கும்  சிலிண்டர் விலை ஒரு பக்கம் இருந்தாலும் வேறு வழி இல்லாதது தான் உண்மை ஆகும். 

சிலிண்டர் விலை உயர்வு ஏற்கனவே பாரமாக இருக்கையில் புத்தாண்டு முதல்நாளே வந்துள்ள செய்தி பெரும் இடியாக உள்ளது. 2023 ஜனவரி முதல் நாளே சிலிண்டர் விலையில் ஏற்றம் உண்டாகியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளது.  

நம் தினசரி பயன்பாட்டில் ஒர் அங்கமான கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில நாட்களாக விலை குறைந்து கொண்டு இருந்தது. அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சந்தையின் கச்சா எண்ணெய் விலை இறக்கத்தால் கச்சா எண்ணெய் விலை அவ்வப்போது மாறுகிறது. இன்று கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் விமான எரிபொருள், கேஸ் சிலிண்டர் போன்றவையின் விலை அதிகரித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலே LPG சிலிண்டர் விலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேஸ் கிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 1892 ரூபாய்க்கு சென்னையில் விற்பனை செய்த 19 கிலோ சிலிண்டர் 1917 ரூபாய் விற்பனை ஆகிறது. இந்த சிலிண்டர் விலை ஏற்றம் முக்கியமாக வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். இது உணவகங்கள், தேநீர் கடை போன்றவையில் விலை உயர்வை ஏற்படுத்தலாம்.  

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்