Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rain Update: தமிழகத்தில் 5மாவட்டங்களில் கனமழை..! உஷார் மக்களே..!

Muthu Kumar June 25, 2022 & 16:50 [IST]
Rain Update: தமிழகத்தில் 5மாவட்டங்களில் கனமழை..! உஷார் மக்களே..!Representative Image.

Rain Update : தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் வெப்பம் காரணமாக மக்கள் தத்தளித்தனர். இந்நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான தட்ப வெட்பம் தற்போது இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டால் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்