Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியா எங்க கூட்டாளி கிடையாது.. ஆனால்.. அமெரிக்கா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்!!

Sekar Updated:
இந்தியா எங்க கூட்டாளி கிடையாது.. ஆனால்.. அமெரிக்கா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்!!Representative Image.

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், சமீபத்தில் வாஷிங்டனில் நடந்த பாதுகாப்புக் கூட்டத்தில், இந்தியா அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது, ஆனால் மற்றொரு பெரிய சக்தியாக இருக்கும் என்று கூறியுள்ளது சர்வதேச அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. 

வாஷிங்டனில் நடந்த ஆஸ்பென் செக்யூரிட்டி ஃபோரம் கூட்டத்தில் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி காம்ப்பெல், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவை வலியுறுத்தினார். தான் அறிந்த வரையில், இந்தியா மற்றும் அமெரிக்காவை விட வேகமாக மிகவும் நெருக்கமாக மாறிய வேறு எந்த இருதரப்பு உறவும் இல்லை என்று கூறினார்.

வெள்ளை மாளிகையின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் காம்ப்பெல், அமெரிக்காவிற்கு இந்தியாவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார் மற்றும் இருதரப்பு உறவு அவரது பார்வையில் முக்கியமானது என்று கூறினார். மேலும், அமெரிக்கா தனது திறனில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்றும், தொழில்நுட்பம் மற்றும் பிற விஷயங்களில் ஒன்றாகச் செயல்படுவதுடன், மக்களிடையேயான உறவுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 

“இந்தியா ஒரு தனித்துவமான மூலோபாயத் தன்மையைக் கொண்டுள்ளது. அது அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்காது. அது ஒரு சுதந்திரமான, சக்திவாய்ந்த அரசாக இருக்க வேண்டும் என்ற ஆசையைக் கொண்டுள்ளது. மேலும் அது மற்றொரு பெரிய சக்தியாக இருக்கும். ஆனால் நமது மூலோபாய சீரமைப்பு ஏறக்குறைய ஒவ்வொரு அரங்கிலும் வளர்ந்து வருகிறது என்று நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று காம்ப்பெல் கூறினார்.

அதே சமயம், இரண்டு நாட்டு அதிகார மட்டத்திலும் தடைகள் உள்ளன மற்றும் பல சவால்கள் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அதே சமயம், இது சில லட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டிய உறவு என்பதால், நாம் ஒன்றாகச் செய்யக்கூடிய விஷயங்களை, அது விண்வெளி, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், அந்த திசையில் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையே உள்ள தடைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு, ஆழமான உறவு வளர்ந்து வந்துள்ளது என்று கூறிய அவர், இந்தியா-அமெரிக்க உறவு என்பது வெறுமனே சீனாவைச் சுற்றியுள்ள பதட்டத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை என்று வலியுறுத்தினார். மேலும் இந்த நெருக்கத்திற்கு அங்குள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் ஒரு சக்திவாய்ந்த இணைப்பு சக்தியாக உள்ளதாகவும் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு தங்களுக்கு ஆமாம் சாமி போடுவதாக இல்லாமல், தனித்துவமாக இருப்பதால் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியா மீது அதிருப்தியில் உள்ள நிலையில், அமெரிக்கத் தரப்பில் இருந்து இப்படியொரு வார்த்தை வந்துள்ளது, சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்