Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராஃபிக் வேலையில் AI கேமராக்கள்..! போக்குவரத்து விதிமீறல்களுக்கு சரியான கருவி.. | Kerala AI Camera

Gowthami Subramani Updated:
டிராஃபிக் வேலையில் AI கேமராக்கள்..! போக்குவரத்து விதிமீறல்களுக்கு சரியான கருவி.. | Kerala AI CameraRepresentative Image.

கேரளாவில் புதிதாக AI கேமரா மூலம், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறியும் சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டமானது ஒரு மாத கால சோதனைக்கு பிறகு, கடந்த திங்கள்கிழமை முதல் கேரள அரசு செயற்கை நுண்ணறிவால் இயங்கக் கூடிய கேமரா கண்காணிப்பு அமைப்பைத் தேர்வு செய்ய உள்ளது. இந்த AI செயல்படுத்த கேமராக்கள், மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகளில் இயங்குகிறது. இது அங்கு நடக்கும் ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறல்களையும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைகிறது.

மேலும், அனைத்து வானிலையிலும், தானியங்கி போக்குவரத்து குற்றங்களைக் கண்டறியும் அமைப்பு, சட்டத்தை மீறுபவர்களின் படங்களைப் படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் எனக் கூறப்படுகிறது. அதன் படி, 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் பெறக்கூடிய படங்களை செயலாக்கி, வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்களின் தன்மையின் அடிப்படையில் சட்டப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடக்கூடியதாக அமைகிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜீ தெரிவித்ததாவது, “இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூலம், நாள் ஒன்றுக்கு 25,000 நோட்டீஸ்களை வெளியிட முடியும்” என்று கூறினார்.

இந்த கேமரா மூலம், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிவப்பு சிக்னலைத் தாண்டுபவர்கள், அதிக வேகம், சட்ட விரோதமாக செல்பவர்கள் போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்