Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 15 பேர் பலியான பரிதாபம்!!

Sekar October 22, 2022 & 12:10 [IST]
பஸ்ஸும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 15 பேர் பலியான பரிதாபம்!!Representative Image.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தின் சுஹாகி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது இரவு 10.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உத்தரபிரதேசத்தில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. 

காயமடைந்த 40 பேரில், 20 பேர் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ரேவா பேருந்து மற்றும் டிராலி லாரி மோதி விபத்துக்குள்ளானதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் இன்று காலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பேசி சம்பவம் குறித்து தெரிவித்தார். பயணிகளின் சடலங்கள் மத்திய அரசால் பிரயாக்ராஜுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ரூபாய் 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்