Sun ,Nov 10, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

ஏடிஎம்மில் பணம் எடுப்போர் கவனத்திற்கு... காவல்துறை தடாலடி நடவடிக்கை!

KANIMOZHI Updated:
ஏடிஎம்மில் பணம் எடுப்போர் கவனத்திற்கு... காவல்துறை தடாலடி நடவடிக்கை!Representative Image.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து மற்றவர்களுடைய ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடி வந்த  நபர் போலீசாரிடம் வசமாக சிக்கிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

விசாரணையில் பாசிப்பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த  சையது முகம்மது மகன் சையது இப்ராஹிம் என்பவர், கடந்த ஒரு ஆண்டு காலமாக 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க வரும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களுக்கு உதவி செய்து பணம் எடுத்துக் கொடுப்பது போல் நடித்து அவர்களது ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக்கொண்டு பின் நம்பரை தெரிந்து கொண்டு கையில் இருக்கும் சேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து ஏமாற்றிவிட்டு  அருகில் இருக்கும் ஏடிஎம்க்கு சென்று அவரது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை திருடி கொள்வதும், நகைக்கடையில் சென்று அந்த கார்டை பயன்படுத்தி நகை வாங்குவது  என நூதன திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

 

இதுகுறித்து தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தததை தொடர்ந்து, தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் அறிவுரைப்படி தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில்  உதவி ஆய்வாளர் கலைச்செல்வன்,சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், காவலர் சிலம்பரசன், சோனை முத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.

 

ஜனவரி 4 ஆம் தேதி யான  நேற்று நகரில் உள்ள  கோட்டை அம்மன் கோவில் அருகில்  ரோட்டில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது இருசக்கரத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார் காவல்துறையின்  விசாரணையில் வேறு வழி இல்லாமல் உண்மையை ஒப்புக்கொண்ட மேற்படி வாலிபரை விசாரணை செய்ததில் தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் அடிக்கடி தேவகோட்டை நகருக்கு வந்து ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி அவர்களின் ஏடிஎம் கார்டுகளை வாங்கி பணம் எடுப்பது போல் வேறு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அவரது ஏடிஎம்  கார்டில் இருந்த பணத்தை திருடி செல்வதுடன் நகைக்கடைகளில் நகைகளாக வாங்கியதையும் ஒப்புக்கொண்டார். 

 

அவரை கைது செய்த போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றினர். விசாரணைக்கு பின்னர் சையது இப்ராஹிம்மை நீதிமன்றத்தில்   ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்