Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி கூலிங் பீரை கூடுதல் விலைக்கு விற்றால் இதுதான் கதி... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி! 

Kanimozhi Updated:
இனி கூலிங் பீரை கூடுதல் விலைக்கு விற்றால் இதுதான் கதி... அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி! Representative Image.

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற 852 மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் இதுவரை 2,822 டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 852 மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளதாகவும், இதே புகாருக்கு துணை போன  1,970 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

 

அதுமட்டுமின்றி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து 4.61 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சட்டவிரோதமாக பார் நடத்தியதாக கூறி 798 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திமிஸி போடப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பார் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக பார் நடத்தி மதுபானம் அருந்த அனுமதித்த பார் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுவிலக்கு ஆயதீர்வத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்