Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பகீர்.. சினிமா படபாணியில்.. கன்னத்தில் அறைந்த சிறுமியை பழிவாங்கிய கொடூரன்..

Nandhinipriya Ganeshan September 12, 2022 & 12:20 [IST]
பகீர்.. சினிமா படபாணியில்.. கன்னத்தில் அறைந்த சிறுமியை பழிவாங்கிய கொடூரன்..Representative Image.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவத்தில் உள்ள மதோடண்டா கிராமத்தை 16 வயதான மாணவி அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், பள்ளிக்கு சென்று வரும்போது அவ்வப்போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கேலி, கிண்டல் செய்வது, மற்றும் பாலியர்ல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதனிடையே, கடந்த 2 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனார். இதனால், ஆத்திரமடைந்த அச்சிறுமி, அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதை பார்த்த மற்ற இளைஞர்கள் தினேஷை பெண்ணிடம் அடி வாங்கியவன் என்று படத்தில் வருவதுபோல கேலி செய்துள்ளனர். இதனால், அவமானம் தாங்கம் முடியாமல் அச்சிறுமியை பழிவாங்க திட்டம் போட்டுள்ளார். இதற்கு அவரது நண்பரான அமர் சிங்கிடம் உதவிக்கேட்டுள்ளார். 

இதையடுத்து தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் சிறுமி ரேகா பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அவரது தாயார் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட, தந்தை வழக்கம் போல விவசாயப் பணிக்கு சென்றுள்ளார்.

சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தினேஷும், அமர் சிங்கும் அவர் வீட்டுக்கு சென்று சிறுமியின் வாயில் துணியை வைத்து கட்டி இருவரும் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத அவர்கள், சிறுமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர். 

மதியம் வீட்டுக்கு வந்த போது அச்சிறுமியின் தந்தை உடல் கருகி உயிருக்கு போராடிய மகளை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், அவருக்கு நேற்றுதான் சுயநினைவு திரும்பியது. சிறுமி கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் தினேஷையும், சிங்கையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிக்கு இன்னும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்