Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Modi Ji Thali | நம்ம பிரதமருக்கு இப்படியும் ஒரு ரசிகரா? அதுவும் அமெரிக்காவுல..

Nandhinipriya Ganeshan Updated:
Modi Ji Thali | நம்ம பிரதமருக்கு இப்படியும் ஒரு ரசிகரா? அதுவும் அமெரிக்காவுல.. Representative Image.

ஜூன் மாதம் அதிபர் ஜோ பிடன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி தனது முதல் அரசு பயணமாக அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெறவுள்ளார். பிரதமர் மோடிக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் எங்கு சென்றாலும் புலம்பெயர்ந்த இந்திய மக்களிடம் இருந்து அன்பும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

அரசுமுறைப் பயணமாக செல்லும் மோடியை வரவேற்கும் பொருட்டு நியூ ஜெர்சியில் உள்ள உணவகம் ஒன்றில் 'மோடி ஜி தாலி' (Dish) என்ற சிறப்பு இந்திய உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீபாத் குல்கர்னி, அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தின் கோரிக்கையின் பேரில் மோடி ஜி தாலி உணவை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மோடி ஜி தாலி: 

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் அமைந்திருக்கும் இந்த தாலியில், சர்சன் கா சாக், காஷ்மீரின் ஆலு, இட்லி, தோக்லா, சாச் மற்றும் அப்பளம் உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது.

இதனை சாதனையைக் கொண்டாடவும், சிறுதானிய உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்கிவருவதாக ஶ்ரீபாத் குல்கர்னி தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அமெரிக்க சமூகத்தில் ராக்ஸ்டாராக வலம் வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மற்றொரு பெயரில் சிறப்பு இந்திய உணவை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்