Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Online Loan App Scams : உஷார் மக்களே..மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் லோன் ஆப்ஸ் மோசடி.!!

Sekar May 16, 2022 & 17:02 [IST]
Online Loan App Scams : உஷார் மக்களே..மீண்டும் அதிகரிக்கும் ஆன்லைன் லோன் ஆப்ஸ் மோசடி.!!Representative Image.

Online Loan App Scams : சட்டவிரோத ஆன்லைன் லோன் ஆப் வழக்கில், ஒடிசா குற்றப்பிரிவின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) புவனேஸ்வரில் இருந்து இயங்கிய மோசடி நபரை கைது செய்தது. தகவல்களின்படி, கைது செய்யப்பட்ட மோசடி நபர் குர்கானில் உள்ள செக்டர்-48 ஐச் சேர்ந்த தருண் துடேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2020 கடைசி மற்றும் 2021 தொடக்கத்தில் 7 நாட்கள் கடன் வழங்கும் ஆன்லைன் லோன் ஆப்கள் மிகப்பெரும் அளவில் பெருகி, அதிக வட்டி என்ற பெயரில் மக்களின் ரத்தத்தைக் குடித்தன. இதில் சில உயிர்பலிகள் ஏற்பட்ட நிலையில், அப்போது பல்வேறு மாநில போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு இது போன்ற நூற்றுக்கணக்கான ஆன்லைன் லோன் ஆப்கள் முடக்கப்பட்டன.

மேலும் பெங்களூர், ஹைதராபாத், குருகிராம் உள்ளிட்ட பல நகரங்களிலும் கைது நடவடிக்கைகள் அரங்கேறின. பின்னர் அவை படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் பெருகி வருவதாக கூறப்படுகிறது. பிளே ஸ்டோரிலேயே இந்த மோசடி ஆப்கள் இருப்பதால், இதற்கு இரையாகும் போக்கு தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு வழக்கில் ஒடிசாவில் பொருளாதார குற்றப் பிரிவு நடத்திய விசாரணையின் மூலம் தருண் துடேஜா எனும் நபர் சிக்கியுள்ளார். 

அவர் டிஜிட்டல் படுவா, ஐபிஐஎஸ்ஏ ஆன்லைன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்விட்ஸ் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட், பஸார்ப் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட், மிலானம் எண்டர்பிரைஸ் மற்றும் பஸ்ஸட் ஆன்லைன் போன்ற நிறுவனங்களை நடத்தி முறைகேடாக ஆன்லைனில் கடன் தருவதாக கூறி மக்களை ஏமாற்றி வந்தார்.

இந்நிலையில் தருண் தற்போது ஒடிசா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு நபர்களின் பெயரில் மொத்தம் 41 போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் இருந்து "IWT" என்ற ஷெல் நிறுவனத்தின் இயக்குனர் முகமது ஜாவேத் சைஃபியையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.6.57 கோடி பணத்தையும் ஒடிசா போலீஸ் கைப்பற்றியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்