Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தமிழ் நாடெனும் போதினிலே....பாரதியார் கவிதையுடன் உரையை தொடங்கிய பிரதமர்..!

madhankumar May 26, 2022 & 19:26 [IST]
செந்தமிழ் நாடெனும் போதினிலே....பாரதியார் கவிதையுடன் உரையை தொடங்கிய பிரதமர்..!Representative Image.

தமிழ்நாடும் மண் மிகவும் சிறப்பு வாய்ந்தது, மொழியும் மக்களும் மிகவும் சிறப்புவாய்ந்தது, அதைத்தான் பாரதியார் தன் கவிதையில் செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே என கூறி தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழ் மொழி நிலையானது.. தமிழ் கலாசாரம் உலகளாவியது ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தலைசிறந்தவர்களாக உள்ளனர் என பெருமையாக கூறினார். 

மேலும் ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்த நபராக விளங்குகின்றனர். அண்மையில் இந்திய காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிக்கான அணிக்கு நான் வரவேற்பு அளித்தேன். அதில் இந்தியா வென்ற 16 பதக்கங்களில் 6 பதக்கங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. கன்னடா முதல் மலேசியா வரை, சென்னை முதல் கனடா வரை, மதுரை மலேசியா வரை, சேலம் முதல் தென்னாப்பிரிக்கா வரை பரவியது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் கேன்ஸ் விழாவில் தமிழ்நாட்டிற்கான பாரம்பரிய ஆடையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அது உலகளவில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கு சிறப்பானதாக அமைந்தது.  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 31ஆயிரம் ரூபாய்க்கு மேலான திட்டங்கள் இங்கு தொடங்கப்பட்டன. நான் இங்கு சில முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட விரும்புகிறேன். சாலை கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு வசதி திட்டம் மூலம் சென்னை கலங்கரை விளக்கம் விட்டு வசதி பிரிவு மூலம் வீடு கிடைக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான திட்டம். இது சூழலியலுக்கு இசைவான ஒரு திட்டம். சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக ஆக்கும் அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்