Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமரின் அமெரிக்க பயணம் துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் - அமைச்சர் ஸ்மிருதி ராணி

Baskarans Updated:
பிரதமரின் அமெரிக்க பயணம் துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் - அமைச்சர் ஸ்மிருதி ராணிRepresentative Image.

டெல்லி: பிரதமரின் அமெரிக்க பயணம் மூலம் இருநாடுகளின் உறவு வலுவடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக நாடுகள் மின் வாகனங்களை தயாரிப்பை ஊக்குவிக்கும் நிலையில் செமிகண்டக்டர்களுக்கான அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தாகியுள்ள செமிகண்டக்டர் விநியோக சங்கிலி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஆராய்ச்சியை மட்டுமல்லாமல், வணிக வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும்.

இந்திய தனது பயன்பாட்டிற்கான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பு தற்போது சாத்தியமாகியுள்ளது என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்