Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pongal 2023: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! 

KANIMOZHI Updated:
Pongal 2023: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! Representative Image.

Pongal 2023: ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! 


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

  • ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி.  இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • . அதிகபட்சமாக 300  பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • .மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது.
  • மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
  • மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.
  • காளைகள்ள அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 
  • காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயல்களும் அனுமதிக்கப்படாது என தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்