Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க ரூ.1.66,875 மானியம்...விண்ணப்பிப்பது எப்படி..!

madhankumar August 08, 2022 & 15:18 [IST]
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க ரூ.1.66,875 மானியம்...விண்ணப்பிப்பது எப்படி..!Representative Image.

2022 மற்றும் 2013 ஆண்டிற்கான கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம். மீனவர் நலத்துறை மானிய கோரிக்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்" செயல்படுத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பதில் ஆர்வமும் திறனும் உள்ள கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கி, கோழி வளர்ப்பிற்கான கொட்டகை அமைத்தல், உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சுபொறிப்பான்), 4 வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1.66,875/- வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் சேர விருப்பமுடைய நபர்கள் மானியம் தவிர்த்து மற்ற 50% நிதி உதவியை வங்கிகள் மூலமும் அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமும் திரட்டிக்கொள்ள வேண்டும். 

மானியம் பெறுவதற்கான தகுதி:

இந்த திட்டத்தில் சேர பயனாளர்களுக்கு கொட்டகை கட்டுமானம் கட்ட 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும், அந்த பகுதியானது மனிதர்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும், மேலும் பயனாளர் தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பவராக இருக்க வேண்டும், விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் 30 சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினராக இருக்க வேண்டும், இதற்கு முன்னர் அரசு வழங்கிய கோழி வளர்ப்பு மானியத்தில் பயன்பெற்றவராக இருக்க கூடாது, மேலும், பயனாளி கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 வருடங்களுக்கு குறையாமல் பராமரிக்க உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் வருடத்திற்கு 17500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும்.

வருமானம்:

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2000 முட்டைகளை குஞ்சுகள் பொரிப்பதற்கு வைத்துக்கொண்டு மற்ற முட்டைகளையும் நன்கு வளர்ந்த கோழி மற்றும் சேவல்களை இறைச்சிக்காகவும் விற்பனை செய்வதில் இருந்து ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆவணங்களுடன் ஒப்படைத்திட 15.08.2022-க்குள் கால்நடை மருந்தகத்தில்சமர்ப்பிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்