Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கணவனின் கள்ளக்காதல்.. கடுப்பில் மனைவி வெறிச்செயல்!!

Sekar August 17, 2022 & 13:09 [IST]
கணவனின் கள்ளக்காதல்.. கடுப்பில் மனைவி வெறிச்செயல்!!Representative Image.

கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்ததால், கடுப்பான மனைவி கணவரின் பிறப்புறுப்பில் வெந்நீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள புதுப்பட்டு எனும் கிராமத்தில் வசிப்பவர் தங்கராஜ். இவருக்கு வயது 32. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 மகள்களும் உள்ளனர்.

தங்கராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் நிலையில், வேலை பார்க்கும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கணவன் தங்கராஜ் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது மனைவிக்கு தெரியவந்ததால், கடந்த ஒரு மாதமாகவே இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், வேறொரு பெண்ணுடன் தொடர்ந்து வீடியோ காலில், வீட்டிலிருக்கும்போதே அடிக்கடி பேசி வந்துள்ளார் தங்கராஜ்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி பிரியா, கணவனை பழிவாங்க நினைத்துள்ளார் . இதையடுத்து வீட்டில் தங்கராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதனை கணவரின் பிறப்புறுப்பின் மீது ஊற்றியுள்ளார். இதனால் தங்கராஜ் அலறித் துடிக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தங்கராஜை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்குள்ள மருத்துவர்கள், 40 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டதால் முதலுதவி மட்டும் செய்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்