Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழங்கால உலோக சிலைகள் மீட்பு; அதிரடி காட்டிய போலீஸ்! 

Kanimmozhi Updated:
பழங்கால உலோக சிலைகள் மீட்பு; அதிரடி காட்டிய போலீஸ்! Representative Image.

மானாமதுரையில் மூன்று பழங்கால உலோக சிலையை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சி செய்த நபரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்ததுடன் மூன்று சிலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் இவர் இரண்டு தேவி சிலை மற்றும்  கருப்பசாமி உலோக சிலை ஆகியவற்றை ஒவ்வொன்றும் 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக வாடிக்கையாளர்களை தேடிவருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 

உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடி தலைமையிலான போலீசார் சிலைகளை வாங்குபவர்கள் போல வேடமிட்டு வீரபத்திரன் இல்லத்திற்கு சென்று இருக்கிறார்கள் அப்பொழுது வீரபத்திரன் அவருடைய வீட்டில் ஒரு தனி அறையில் இந்த மூன்று சிலைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதற்கான ஆவணங்களை கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் இருந்த அந்த மூன்று சிலைகளையும் சிலை கடத்து தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

மேலும் இந்த சிலை விற்பனைக்கு தரகராக செயல்பட்ட ஆட்டிறைச்சி கடையில் பணி புரியும் போஸ் என்பவரையும் போலீசார் தேடி வந்தார்கள், போஸ் தலைமறைவாக இருந்த சூழ்நிலையில் மதுரையில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மதுரை சென்று போஸ் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். 

இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது, சிலை கடத்தலில் யார் யாரெல்லாம் தொடர்பு இருக்கிறார்கள் என்ற பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சிலைகள் தொடர்பாக இந்து சமய அறநிலத்தை அதிகாரியிடம் இந்த சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்