Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருமணமாகாதவர்களுக்கு உதவித்தொகை: ஹரியானா அரசு அதிரடி உத்தரவு

Baskar Updated:
திருமணமாகாதவர்களுக்கு உதவித்தொகை: ஹரியானா அரசு அதிரடி உத்தரவுRepresentative Image.

ஹரியானாவில் 40முதல் 65 வயது வரை உள்ள திருமணமாகாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் கமல்புரா கிராமத்தில் ஜன் சம்வத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, மாநிலத்தில்,45 முதல் 60 வயது வரை உள்ள திருமணமாகதவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டம் முதியோர் ஓய்வூதிய திட்டம் போல் இருக்கலாம்.ஹரியானா மாநிலத்தில் நிறைய இளைஞர்கள் 40 வயதை கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதற்குக் காரணம் ஹரியானா மாநிலத்தில் ஆண் பெண் பாலின விகிதத்தில் பெண்கள் குறைவாக உள்ளனர். இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேர் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஹரியானா மாநிலத்தில் 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனை கருத்தில் கொண்டும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார். 

ஹரியானாவில் பெண் கிடைக்காத ஆண்கள் மத்தியப் பிரதேசம், பீகார், கேரளா, அசாம் , மேற்கு வங்கம் தவிர ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்களை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்